சேலம்: தமிழ் பெண்களை இழிவாகப் பேசியதாக நடிகை குஷ்பு மீது சேலம் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணை வரும் ஜனவரி மாதம் 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் பெண்களின் கற்பு குறித்து வார இதழ் ஒன்றுக்கு நடிகை குஷ்பு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் தமிழ் பெண்களை இழிவாகப் பேசியதாக்க கூறி பாமக சேலம் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் முருகன் என்பவர் கடந்த 2005ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ல் வழக்கு தொடர்ந்தார்.
16-11-2005 அன்று இந்த வழக்கில் நீதிமன்றத்தில் குஷ்பு நேரில் ஆஜராகி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தபோது குஷ்புவின் கார் மீது தக்காளி, அழுகிய முட்டைகளை வீசியதாகக் கூறி சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் அறிவழகன் உள்பட 41 பேர் மீது மேட்டூர் தாசில்தார் ஃபைஸ் முகம்மதுகான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று குஷ்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது மாஜிஸ்திரேட் பகவதியம்மாள் விசாரணையை வரும் ஜனவரி மாதம் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!